பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கை அடுத்து தோனி படத்தில் நடித்த மற்றொரு நடிகர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் ராஜ்புட் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டார். இவர் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் தோனியின் வாழ்க்கை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவரது மரணம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது உயிரை மாய்த்துக்
மன உளைச்சல் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், தோனி படத்தில் சுஷாந்த்தின் நண்பராக நடித்த சந்தீப் நஹர் மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள அவரது வீட்டிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டார்.
அவரது உயிரிழப்புக்கு முன்னதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது தொழில்முறை, தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசினார். அதேவேளையில் தனது மரணத்துக்கு பின்னர் தனது மனைவியை யாரும் எதுவும் சொல்ல கூடாது என தெரிவித்திருந்தார். சுஷாந்த் சிங் உயிரை மாய்த்துக் இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில், அவருடன் நடித்த மற்றொரு நடிகர் உயிரிழந்திருப்பது பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







