‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.  விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு , குக் வித்…

‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. 

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, அது இது எது நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு , குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகர் புகழ்.  தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் கௌதம் கார்த்திக் நடித்த 1947 என்ற படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு வரவேற்பைப் பெற்றது.  தற்போது கதையின் நாயகனாக ‘மிஸ்டர் ஜூ கீப்பர் ‘ (Mr.zoo keeper) என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தை ஜே. சுரேஷ் இயக்கியுள்ளார்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.  இப்படத்தை ஜே 4 ஸ்டுடியோஸ் ராஜ ரத்தினம் தயாரித்துள்ளார்.  இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாகப் படக்குழு அறிவித்திருந்தது.  இந்த நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் மே 3-ம் தேதி ‘மிஸ்டர் ஜூ கீப்பர் ‘ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

https://twitter.com/VijaytvpugazhO/status/1774842129170190432?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1774842129170190432%7Ctwgr%5E4bff2d4989808a7e2fb2156374032a969f74640a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FCinema%2FCinemaNews%2Fpugazhs-mr-zoo-keeper-to-hit-the-screens-on-may-3-1099976

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.