மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் பதவி ஏற்றுக்கொண்டார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுகவை சேர்ந்த தர்மர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
-ம.பவித்ரா








