தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட எம்.பி கனிமொழி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டு தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
https://twitter.com/KanimozhiDMK/status/1464235240742809611
மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலும் அவர் ஆய்வு செய்தார். இதையடுத்து பொதுமக்களுக்கு உணவு, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை எம்பி கனிமொழி வழங்கினார்.
தற்போது 11 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 67 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.








