ரஜினி வருகையால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற பிரச்சாரத்தை திமுக பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கோவை மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் காந்தி சிலைக்கு மாலையணிவித்த கனிமொழி மகளிர் அமைப்புகள் நடத்திய கருத்தரங்கத்தில் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டதாகக் கூறினார்.
தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ரஜினி வருகையால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் கனிமொழி கூறினார்.







