4வது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய் – பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரில் தனது 4 வயது மனநலம் குன்றிய குழந்தையை 4-வது மாடியில் இருந்து தாய் தூக்கி வீசிய நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் சம்பங்கிராம் பகுதியில்…

பெங்களூரில் தனது 4 வயது மனநலம் குன்றிய குழந்தையை 4-வது மாடியில் இருந்து தாய் தூக்கி வீசிய நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் சம்பங்கிராம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தோடு வசித்து வருபவர் கிரண். இவரது மனைவி சுஷ்மா. 29 வயது நிரம்பிய இவர் பல் டாக்டராக பயிற்சி மேற்கொண்டு வறுகிறார். இவர்களுக்கு 4 வயதில் துருதி என்ற குழந்தை உள்ளது. மனநலம் குன்றிய அக்குழந்தைக்குப் பேச்சும் வராது என்று சொல்லப்படுகிறது. இதனால் சுஷ்மா சிறுமியை கவனித்து வர வேண்டியிருந்தது.

குழந்தையை கவனித்து வந்ததால் சுஷ்மாவால் தனது பயிற்சியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பின் 4 வது மாடிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். திடீரென மாடியில் இருந்து துருதியை வீசிய சுஷ்மா பின்னர் அவரும் அங்கிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் சுஷ்மாவை அங்கிருந்து மீட்டுள்ளனர். சிறுமி துருதி வீசி எறியப்பட்ட இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முதலில் குழந்தை தவறி விழுந்ததாக குடும்பத்தாரால் சொல்லப்பட்ட நிலையில், கணவர் கிரண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரனை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் சிறுமியை கவனித்துக் கொள்ள முடியாதாதல் தாயே இவ்வாறு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் சுஷ்மா மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே துருதியை மாடியில் இருந்து தாய் தூக்கி வீசும் நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.