திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான உறவினர் கைது செய்யப்பட்டார்.
பனந்தோப்பு அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த ஜீவிதா பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை உறவினரான சின்ன கசிநாயக்கன் பட்டியை சேர்ந்த சரண்ராஜ் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜீவிதா, சரண்ராஜ் இடம் கடந்த சில மாதங்களாக பேசாத காரணத்தால் ஆத்திரமடைந்த அவர், ஜீவிதாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஜீவிதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், வெல்லக்கல் நத்தம் பகுதியில் இருந்த சரண்ராஜை போலீசார் கைது செய்தனர்.







