தி லெஜண்ட் படத்தின் மொசலோ மொசலு வீடியோ பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.
லெஜண்ட் சரவணன் முதல்முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் ‘தி லெஜண்ட்’ படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் 29 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் மற்றும் வாடிவாசல் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ள நிலையில், முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு லெஜண்ட் என தடம் பதித்திருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில், சகமர்சியல் மாஸ் படமாக உருவாகியுள்ளது. பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது. தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். சின்னத் திரைக் கலைவாணர் விவேக் கடைசியாக இப்படத்தில் நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார். படத்தில் இடம்பெறும் அனைத்து கதாப்பாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.
கோபுரம் சினிமாஸ் ஜி.என்.அன்புச்செழியன், அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் இத்திரைப்படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார். கேரளாவில் தி லெஜண்ட் படத்தின் வெளியீட்டு உரிமையை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர் லிஸ்டின் ஸ்டீபன் வாங்கியுள்ளார். ஹிந்தி வெளியீட்டு உரிமையை கணேஸ் பிலிம்ஸ் விநியோகஸ்தர் நம்பிராஜன் வாங்கியுள்ளார்.
#TheLegendSaravanan starring #TheLegend Movie #MosaloMosalu Video Song releasing Today at 05.30 PM
Worldwide release on July 28th#TheLegendSaravanaStoresProduction #TheLegend #TheLegendFromJuly28@jdjeryofficial @Jharrisjayaraj @Gopuram_Cinemas #Anbuchezhian pic.twitter.com/rs2PK6hoLT
— The Legend (@_TheLegendMovie) July 20, 2022
தி லெஜண்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மொசலோ மொடலோ வீடியோ பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் பாடலை பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான விஜய் எழுதியுள்ளார். ராஜூ சுந்தரம் மாஸ்டர் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். ஏற்கெனவே மொசலோ மொசலு பாடல் 14 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், இப்பாடலின் வீடியோ இன்று வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா








