துருக்கியில் உள்ள சகரியா பல்கலைக்கழகத்தில் பார்வையற்ற தனது மகளுடன் கௌரவப் பட்டம் பெறும் தாயின் பழைய புகைப்படம் மீண்டும் வைரலாகி வருகிறது.
துருக்கி நாட்டை சேர்ந்தவர் பெர்ரு மெர்வ் குல். பார்வையற்ற மாணவியான அவர், அங்கு உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் 4 ஆண்டு சட்டம் படிப்பு படித்து வந்தார். கண்பார்வையற்ற மகளின் கல்விக்கு தாய் ஹவ்வா குலு உதவினார். மகளுக்காக பாடங்கள் முழுவதையும் படித்து காட்டி அவரை தேர்வுக்கு தயார் செய்தார்
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு சகரியா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது பார்வையற்ற மாணவி பெர்ரு மெர்வ் குல்லுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. மேலும் மகளின் கல்விக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் உதவி புரிந்து தாய்க்கு கௌரவ பட்டம் வழங்கி பல்கலைக்கழக நிர்வாகம் கௌரவித்தது. இதுதொடர்பான செய்தி அப்போது வெளியானது.இந்நிலையில் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி முகமது ஷாபா என்பவர் தாய் மகள் பட்டம் பெறும் புகைப்படத்தை ட்விட்டரில் தற்போது மீண்டும் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.






