29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

’நிலம் வாங்கணும், வரதட்சணை வாங்கிட்டு வா’: சரமாரி டார்ச்சரால் சட்ட மாணவி தற்கொலை, கணவர் கைது!

சட்ட மாணவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவர் கணவரும் குடும்பத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் ஆலுவா மாவட்டத்தில் உள்ள இடையபுரம் பகுதியை சேர்ந்தவர் மோஃபியா பர்வீன். தொடுபுழாவில் மூன்றாமாண்டு சட்டம் படித்து வந்தார். இவருக்கும் இருமலப்பாடியை சேர்ந்த முகமது சுஹைல் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறிய சுஹைல், பிறகு வேலையை விட்டுவிட்டேன் என்றும் சினிமாவுக்கு கதை எழுதிக் கொண்டிருப் பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் மாதங்கள் செல்ல, சுஹைல் வீட்டில் வரதட்சணை வாங்குமாறு கேட்டுள்ளனர். பின்னர் மெது மெதுவாக சுஹைலும் அவர் குடும்பத்தினரும் மோஃபியாவை டார்ச்சர் செய்ய தொடங்கினர். ஒரு கட்டத்தில் தொல்லை பொறுக்க முடியாமல், கணவர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் ஆலுவா போலீஸ் ஸ்டேஷன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுதீரிடம் புகார் அளித்தார் மோஃபியா.

பிறகு போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கணவரையும் அவர் குடும்பத்தினரையும் அழைத்து பேசியுள்ளனர். அப்போது இன்ஸ்பெக்டர் சுதீர், மோஃபியா வையும் அவர் குடும்பத்தினரையும் அவமரியாதையாக பேசியுள்ளார். கணவர் குடும்பத்துக்கு ஆதரவாக மிரட்டவும் செய்தாராம்.

இதனால் வெறுத்துப் போன மோஃபியா, அங்கிருந்து நேராக வீட்டுக்கு வந்தார். ’என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்; தனியாக இருக்க போகிறேன்’ என்று பெற்றோரிடம் கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் பெற்றோர், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இருந்தார்.

ஜோவின், மோஃபியா

அதிர்ச்சி அடைந்த அவர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் தேடிய போது தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், கணவனும் அவர் குடும்பத்தினரும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தினர் என்றும் போலீஸ் அதிகாரி சுதீர் தன்னை மிரட்டியதாகவும் இதன் காரணமாகவே தற்கொலை செய்வதாகவும் அவர் எழுதியிருந்தார். இதையடுத்து கணவர் தலைமறைவானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தற்கொலை சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக வரதட்சணை தொடர்பான தற்கொலைகள் அங்கு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மோஃபியாவின் வகுப்பு தோழர், ஜோவின் என்பவர் கூறும்போது, அவர் கணவரும் குடும்பத்தினரும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப் படுத்தி உள்ளனர். மோஃபியாவின் விருப்பத்திற்கு மாறாக டாட்டூ குத்திக் கொள்ள சொல்லி இருக்கிறார் சுஹைல். அவர் குடும்பத்தினர் அருகில் நிலம் வாங்க வேண்டும் என்றும் அதற்காக வரதட்சணை வாங்கிவருமாறும் கட்டாயப்படுத்தி உள்ளனர். இது தவிர சொல்ல முடியாத துன்பங்களை தான் அனுபவிப்பதாகவும் மோஃபியா தன்னிடம் கூறியிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மோஃபியாவின் கணவர் சுஹைலையும் அவர் குடும்பத்தினரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

……………….

Advertisement:
SHARE

Related posts

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!

Gayathri Venkatesan

கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,329 பேர் பலி!

Vandhana

“காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது” – பா.சிதம்பரம்

Saravana Kumar