“தமிழ்நாட்டில் இன்று முதல் மிதமான மழை” – எந்தெந்த மாவடங்களுக்கு தெரியுமா?

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்று திசை மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை பரவலாக மழை…

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்று திசை மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 18ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும்,திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.