“மொபைல்ஃபோன் பயன்பாட்டால் மூளை புற்றுநோய் ஏற்படாது” – #WHO ஆய்வில் தகவல்!

மொபைல் ஃபோன் பயன்பாட்டால், மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக மக்களிடையே நிலவிவரும் ஒரு கருத்து, மொபைல்ஃபோன் பயன்பட்டால் மூளை புற்றுநோய் ஏற்படும் என்பது…

“Mobile phone use does not cause brain cancer” - #WHO study informs!

மொபைல் ஃபோன் பயன்பாட்டால், மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக மக்களிடையே நிலவிவரும் ஒரு கருத்து, மொபைல்ஃபோன் பயன்பட்டால் மூளை புற்றுநோய் ஏற்படும் என்பது தான். மூளைக்கு மிக நெருக்கமாக வைத்து செல்போனை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுகள், மூளையை தாக்கி மூளை புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக தொடர்ச்சியாக நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் மொபைல்போன் பயன்பாட்டல் மூளை புற்றுநோய் ஏற்படாது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மொபைல் ஃபோன் பயன்பாட்டிற்கும், புற்றுநோய்க்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது. மொத்தம் 5000 ஆய்வில் இருந்து தரமான 63 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் முடிவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தற்போது என்விரான்மென்ட் இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொபைல் போன் பயன்பாட்டிற்கும், மூளை புற்றுநோய் மற்றும் வேறு எந்த தலை, கழுத்து புற்றுநோய்க்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் மொபைல் போனைப் பயன்படுத்தினாலும், எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும், அதனால் புற்றுநோயுடன் எந்த சம்மந்தமும் இல்லை. செல்போன், வயர்லெஸ் உபகரணங்களில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைவரிசை கதிர்வீச்சுகளால் எந்தவொரு சுகாதார பாதிப்புக்கும் ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.