முக்கியச் செய்திகள் தமிழகம்

குழந்தையின் சிகிச்சைக்கு உடனடியாக உதவிய முதலமைச்சர்

பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த், அகல்யா தம்பதியினருக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை இதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரி சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி  வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வசந்த், அகல்யா தம்பதியினருக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வருண், இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ள செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக குறிப்பிட்டு உள்ளார்.

இந்தக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான ரூ. 2.50 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியா – இலங்கை முதல் டி-20, நாளை தொடக்கம்: தேவ்தத்திற்கு வாய்ப்பு?

Gayathri Venkatesan

அனந்த கிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

இந்தியாவில் இதுவரை 8.7 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Halley karthi