திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்டதை போன்ற எண்ணத்தில் செயல்படுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் நடிகருமான சரத்குமார் மற்றும் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நடிகர் சரத்குமார் பேசியதாவது, ஓட்டுக்கு பணம் பெற்று கொண்டு வாக்களிப்பது ஜனநாயக படுகொலை என சாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்க தேர்தலை போன்று பொதுமக்கள் முன்னிலையில் தலைவர்கள் விவாதம் செய்தால் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என சரத்குமார் யோசனை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சேருவதற்கான வாய்ப்பில்லை என கூறினார்.