வறுமை காரணமாக 3 வருடங்களாக வீடு இன்றி, கழிவறையில் வசித்து வந்த வயதான தம்பதியினருக்கு, மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் மூலம் உதவி செய்துள்ளார்.
மதுரை மேலூர் அருகே பெரிச்சான்குடிபட்டியில், சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற வெள்ளைச்சாமி, மனைவியுடன், குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, கஜா புயல் காரணமாக அவர்களின் குடிசை வீடு சேதமடைந்தது. அன்று முதல் அரசால் கட்டி தரப்பட்ட தனிநபர் கழிப்பறையை, தங்களது வசிப்பிடமாக மாற்றி வாழ்ந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தகவலறிந்த, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளரான துரை ராஜேந்திரன் மூலம், வயதான தம்பதியினருக்கு நிதியுதவி அளித்து, நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.