பிரதமர் மோடியை சந்திக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி ஜன. 19-ந் தேதி முதல் ஜன.31ந்தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மேற்கொண்டு வருகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் வழங்குவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். நாளை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.
தொடர்ந்து மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து அழைப்பிதழை வழங்க உள்ளார்.







