முக்கியச் செய்திகள் தமிழகம்

பள்ளிகள் திறப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு

வகுப்புகள் தொடங்கினாலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரம் ESIC மருத்துவமனையில் புதிய சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தபின், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் திட்டத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, கணேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், 95 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தமிழ்நாட்டிற்கு கூடுதலாகவே ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பள்ளிகளில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம்கள் எந்தவொரு இடையூறு இல்லாமல் தொடர்ந்து செயல்படும் என குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

மேகதாது அணை: விரைந்து அனுமதி வழங்க பசவராஜ் பொம்மை கோரிக்கை

Gayathri Venkatesan

வியட்நாமில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க பயிற்சி மையம்!

Saravana Kumar

மசூதிக்கு சொந்தமான 1700 ச.அடி நிலம் காசி விஸ்வநாத் டிரஸ்ட்டுக்கு பரிசாக தரப்பட்டது

Vandhana