முக்கியச் செய்திகள் தமிழகம்

அமைச்சர் ஆலோசனை – வங்கி அலுவலர்கள் உறக்கம்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசும் போது, வங்கி அலுவலர்கள் உறங்கி கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்களில் மாவட்ட வங்கிகளுக்கான ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைது வங்கிகளிலிருந்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பொது பணி துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு வங்கிகளிலிருந்து பொதுமக்களுக்கு கொடுக்கபடும் கடன் உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

பின்னர் அது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி மக்களுக்கு கடனளிக்க முன்வரவேண்டும் எனவும் தொழில் கடன் முதல் மகளிர் கடன் வரையில் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் உள்ளாட்சி அமைச்சராக இருந்த போதிலிருந்தே மகளிர் சுய உதவி குழுவின் மேல் அக்கரை கொண்டு அவர்களுக்கு கடன் உதவிகளை வழங்க ஏற்பாடு செய்து வந்தார் என்றார். இந்த நிலையில் வங்கி அலுவ்கலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில் பின்னால் அமர்ந்திருந்த அலுவலர்கள் தூங்கி விழுந்தனர். மேலும் செல்போனை பேசி கொண்டும், சமூக வளைதலங்களை பார்த்து கொண்டிருந்தனர்.

 

மக்களுக்கு அரசின் கடன் வழங்கும் திட்டங்கக்ளை கொண்டு செல்ல என்ன செய்யலாம் என அமைச்சருடன் ஆலோசனை நடைபெற்று கொண்டிருந்த நிலையில், தூங்கி கொண்டிருந்த செயல் ஆலோசனை கூட்டத்தையே கலங்கபடுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கடன் செயலி தற்கொலைகள் பெருக அரசு அனுமதிக்கக்கூடாது

Halley Karthik

பேச்சு வார்த்தைக்குச் சம்மதித்த ரஷ்யா-அமெரிக்கா ?

Halley Karthik

GeM இணையதளத்தில் 40 லட்சம் விற்பனையாளர்கள்: பிரதமர் மோடி

EZHILARASAN D