பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இளநிலை செயல்பணியாளர் (அலுவலகம்), இலகுரக ஓட்டுநர், தொழில்நுட்பர் மற்றும் முதுநிலை தொழிற்சாலை பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நாசர், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
– இரா.நம்பிராஜன்








