மெட்ரோ ரயில் பணிகள்; சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை இடமாற்றம்!

சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலை அமைந்த பகுதியில் இருந்து 20 அடி தொலைவில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் மீண்டும்…

சென்னை மெரினா கடற்கரையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக காந்தி சிலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிலை அமைந்த பகுதியில் இருந்து 20 அடி தொலைவில் வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்திலேயே வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ.
தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது வழித்தடம்
மெரினா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கு
சுரங்கப்பாதையில் அமைகிறது.

இந்த மெரினா கலங்கரை விளக்கம் அருகே மெட்ரோ ரெயில் பணி நடைபெற்று வரும்
நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தி சிலை இடம் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

ராட்சத எந்திரங்கள் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும்போது இந்த சிலை சேதம் அடைந்து
விடக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காந்தி சிலையை
தற்காலிகமாக வேறு இடத்தில் நிறுவுவதற்கு மெட்ரோ ரெயில் அதிகாரிகள் திட்டமிட்டு
இருந்தனர்.

ஆனால் கடற்கரை சாலையில் இருந்து வேறு இடத்தில் என்று இல்லாமல் சர்வீஸ்
ரோட்டில் ஏற்கனவே காந்தி சிலை இருந்த இடத்தில் இருந்து 15 முதல் 20 அடி
தொலைவில் தள்ளி வைத்துள்ளனர். மெட்ரோ பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் அதே
இடத்தில் காந்தி சிலை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.