மெட்ரோவில் அட்ராசிட்டி; ஓடும் ரயிலில் குளிக்கும் நபர் – இணையத்தை கலக்கும் வீடியோ!

டெல்லி மெட்ரோ பெண் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மற்றொருவர் மெட்ரோவில் குளிக்கும் நபர் இணையத்தை படுவேகமாக பரவிவருகிறது.  சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் பிகினி மற்றும் மைக்ரோ மினி ஸ்கர்ட் அணிந்து வைரலான “டெல்லி மெட்ரோ…

டெல்லி மெட்ரோ பெண் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மற்றொருவர் மெட்ரோவில் குளிக்கும் நபர் இணையத்தை படுவேகமாக பரவிவருகிறது. 

சமீபத்தில் டெல்லி மெட்ரோவில் பிகினி மற்றும் மைக்ரோ மினி ஸ்கர்ட் அணிந்து வைரலான “டெல்லி மெட்ரோ கேர்ள்” பற்றி இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. 19 வயதான அவர்  பேஷன் சென்ஸுக்கு பரவலான ஆதரவு மற்றும் எதிர்ப்பை பெற்று வருகிறார்.

ரிதம் சனானா என்ற அப்பொண் டெல்லி மெட்ரோவில்  சவாரி செய்யும் போது அவர் நீச்சல் ஆடைகளை அணிந்திருக்கும் பல கிளிப்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இந்த முறை வித்தியாசமான மெட்ரோ வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.  ஆனால் அது இந்தியாவில் இருந்து அல்ல. இந்த வீடியோ நியூயார்க் நகர சுரங்கப்பாதையில் இருந்து எடுக்கப்பட்டது. நியூயார்க் நகர மெட்ரோவில் ஒருவர் குளிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் @princezee என்ற படைப்பாளி பகிர்ந்துள்ளார். மேலும் அது 1.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

 

இப்போது வைரலாகும் வீடியோவில், நியூயார்க் நகர மெட்ரோ ரயிலில் ஒருவர் குளிப்பதைக் காணலாம். இது பகிரப்பட்டதிலிருந்து, கிளிப் 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பல சமூக ஊடக பயனர்கள் மனிதனின் நடனத்தைப் பாராட்டினர்.  மற்றவர்கள் முற்றிலும் அதிர்ச்சியடைந்து, அந்த நபரின் செயலுக்காக அவரைக் கண்டித்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.