முக்கியச் செய்திகள் உலகம்

11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள மெட்டா; மேலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?

மெட்டா 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் மேலும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாகப் பொருளாதார அறிஞர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.சமீபகாலமாக உலக அளவில் செயல்படக்கூடிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்தடுத்து வேலை இழப்பை அறிவித்து பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தற்போது பொருளாதார சூழல் சரியில்லாத நிலையில் செலவுகளைக் குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

உதாரணமாகப் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர், பாதி ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் 12,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்தது.

குறிப்பாக மார்க் ஜுக்கர்பெர்க் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக உலகளவில் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். இந்நிலையில், ஜுக்கர்பெர்க், மேலும் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செப்டம்பர் 2022 நிலவரப்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட மெட்டா – 87000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த ஆண்டு மட்டும் Meta உலகளவில் 11,000 பணியாளர்களை அதாவது தனது நிறுவனத்தின் 13 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. கூடுதல் செலவினங்களைக் குறைக்க மெட்டா நிறுவனம் பல்வேறு திட்டங்களை வகுத்தது.

இதற்கு ஜூக்கர்பெர்க், பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதிகரித்த போட்டி ஆகியவை பணிநீக்கங்களுக்குப் பின்னால் உள்ள சில காரணங்களாகக் குற்றம் சாட்டினார். நிறுவனத்தின் வருவாய் தான் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்தது என்றும் அவர் கூறினார். “கோவிட் தொற்றின் தொடக்கத்தில், உலகம் வேகமாக ஆன்லைனில் நகர்ந்தது. தொற்றுநோய் முடிவுக்கு வந்த பிறகும், தொடரும் பொருளாதார முடக்கத்தைப் பலர் கணித்துள்ளனர். அதனால் நானும் செய்தேன். எங்கள் முதலீடுகளைக் கணிசமாக அதிகரிப்பதற்கான முடிவு இது” என்று ஜுக்கர்பெர்க் ஒரு வலைப்பதிவில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சுப்மன் கில் காயம்: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யார்?

EZHILARASAN D

‘சூரரைப்போற்று’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்ட காரணம்

Web Editor

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: அனுமதி வழங்கப்படுவதாக தகவல்

Vandhana