இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “காவிரி நடுமன்ற தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் 24.05.2026 (நேற்று) தள்ளுபடி செய்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமை பறிபோகும் பேராபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக, உடனடியாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்க வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







