மேகதாது விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தியுள்ளார். கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த…

மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் D.K. சிவக்குமார், மத்திய நீர்வழித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், தமிழ் நாட்டில் இரண்டாம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்கள் சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும், அத்திட்டங்களை நியாயப்படுத்தும் தமிழ் நாடு அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அரசு முறை பயணமாக டென்மார்க் சென்று திரும்பிய நிலையில் நீர்வளத்துறை  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்  ” நீர்வளத் துறையில் எப்படி சிக்கனத்தை பயன்படுத்துவது நீர்வளத் துறையில் நீரை எப்படி பாதுகாப்பது உலகத்திலேயே முன்னோடி முன்னோடி திட்டமாக இருப்பது டென்மார்க். எனவே சென்னையில் இருக்கக்கூடிய இது போன்ற ஆறுகளிலும் சீரமைக்க வேண்டிய எண்ணம் அரசுக்கு உள்ளது.” என தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அந்த அரசாங்கத்திடம் பேச வேண்டும் என்று நாங்கள் விருப்பம் தெரிவித்திருந்தோம் அங்கு இருக்கக்கூடிய நீர்வளத்துறை அமைச்சர் உடன் நீண்ட நேரம் நம்முடைய நிலைமைகளை எடுத்துச் சொன்னோம் அவர்களும் கனிவாக கேட்டனர். மேலும் இது தொடர்பாக இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் மேகதாது, பெண்ணையாற்று அணைகள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.