நம்பர் பிளேட் இல்லாத புதிய காரில் 10 நாட்களாக கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பயணம் செய்து வருவதை என நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார் தனது புதிய இனோவா காரில் நம்பர் பிளேட் இல்லாமல் கடந்த 10 நாட்களாக பயணம் செய்து வருகிறார். இதையடுத்து கோவை மேயராக இருக்கும் கல்பனா ஆன்ந்த் குமார் வாகன சட்டங்களை பின்பற்றவில்லை என நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் மேயரின் புதிய காரில் நம்பர் பிளேட் இல்லாதது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு கோவை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது. அதில், மேயர் பயன்படுத்தும் இனோவா கார் கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவு எண் பெறப்பட்டுள்ளது.
வாகன டீலரிடமிருந்து இன்று வரை அங்கீகரிக்கப்பட்ட நம்பர் பிளேட் கிடைக்கவில்லை. காருக்கான நம்பர் பிளேட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







