அதிரடி காட்டிய மேக்ஸ்வெல்; பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் 48வது இன்றைய ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை பெங்களூரு அணி குவித்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் தன்னை…

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் 48வது இன்றைய ஐபிஎல் போட்டியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை பெங்களூரு அணி குவித்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொள்வதற்கான கடுமையான பலபரீட்சைகள் இன்று நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி 5வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

இப்போட்டியில் பெங்களூரு அணியின் சார்பில், விராட் கோலி, தேவதூத் படிக்கல், கே.எஸ்.பாரத், மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டான் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இந்த ஆட்டத்தில் தனது ப்ளே ஆப் வாய்ப்பை பெங்களூரு உறுதி செய்யுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் இன்றைய போட்டியில், 4 சிக்சர்கள், 3 பவுன்டிரிகள் என மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 57 ரன்களை அதிரடியாக விளாசியுள்ளார். இவரையடுத்து 38 பந்துகளில் 40 ரன்களை படிக்கல் விளாசியுள்ளார். முதலில் களமிறங்கிய கோலி 25 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 23 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பொலிங்கை பொறுத்த அளவில், முகமது ஷமி 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதே போல மோயிஸ் ஹென்ரிக்ஸ் 4 ஓவர்களில் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

இந்த சூழலில் 165 ரன்களை இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்குகிறது. இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு வாழ்வா சாவா நிலையை தீர்மானிக்கும் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.