புரோ கபடி லீக் போட்டி | தபாங் டெல்லி – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று மோதல்!

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தபாங் டெல்லி – குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் – யு மும்பா அணிகள் மோதுகின்றன. 11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த…

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தபாங் டெல்லி – குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் – யு மும்பா அணிகள் மோதுகின்றன.

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – யு மும்பா அணிகள் மோத உள்ளன.

இதையும் படியுங்கள் : “திருமண வாழ்க்கை 30 வயதை எட்டும் என்று நம்பியிருந்தோம்” – ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமான பதிவு!

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் யு மும்பா 2வது இடத்திலும், தபாங் டெல்லி 6வது இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் 7வது இடத்திலும், குஜராத் ஜெயண்ட்ஸ் 12வது இடத்திலும் உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.