கோட் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்க அடுத்ததாக வேட்டையன் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஆம், படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் எனவும், அதற்கான போஸ்டரை பகிர்ந்து கொண்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் அக்டோபர் 10 அன்று வெளியாகிறது.
விரைவில் வெளிவரவிருக்கும் இந்த படம் அநீதிக்கு எதிராக போராடும் ஒரு முஸ்லிம் அதிகாரியை பற்றிய கதை என கூறப்படுகிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாகவும், ராணா டகுபதி தொழிலதிபராகவும் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் நடிகர்கள் பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகினி, ராவ் ரமேஷ், ஷாஜி சென், ரமேஷ் திலக், ரக்ஷன் மற்றும் ஜி.எம்.சுந்தர் ஆகியோரும் நடித்துள்ளனர்.







