” #Martin படம் புதிய படைப்பாக எடுத்துள்ளோம்” – நடிகர் துருவா சர்ஜா பேட்டி!

மார்டின் படம் புதிய படைப்பாக எடுத்துள்ளோம் என துருவா சர்ஜாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன்…

"#Martin is a new work" - Actor Dhruva Sarja interview!

மார்டின் படம் புதிய படைப்பாக எடுத்துள்ளோம் என துருவா சர்ஜாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில், நடிகர் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ‘மார்டின்’ திரைப்படம்.

இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் பிரம்மாண்டமாக திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், கதாநாயகன் துருவா சர்ஜா, கதாநாயகி வைபவி உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் உதய் K மேத்தா பேசியதாவது :

“பிரத்தியேகமாகப் பாடல்களை முதன் முறையாக உங்களுக்குத் திரையிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜூன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா சர்ஜா இப்படத்திற்காக  மிக மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். இயக்குநர் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : “போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் கேள்வி கேட்கட்டும்” – #StateSyllabus குறித்து விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

நடிகர் அர்ஜூன் பேசியதாவது :

“என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. துருவாவின் ஐந்தாவது திரைப்படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய  ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன். உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார். 100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.  நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் டப்பாகி தயாராகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். வித்தியாசமான திரைக்கதை. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், நன்றி”

இவ்வாறு அர்ஜூன் தெரிவித்தார்.

நடிகை வைபவி பேசியதாவது :

“இது எனக்கு மிகவும் சிறப்பான நாள், எங்கள் திரைப்படத்தின் பாடலை பார்த்துள்ளீர்கள். இந்தப்படத்தில் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், மிக சிறப்பான படமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்”

இவ்வாறு நடிகை வைபவி பேசியுள்ளார்.

நடிகர் துருவா சர்ஜா பேசியதாவது :

“தமிழில் எனக்கு 2வது திரைப்படம், ‘செம்ம திமிரு’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல், ‘மார்டின்’ படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள். இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி. இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் திரைப்படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.