ஒரே ஆண்டில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை இழந்த மார்க் ஜூக்கர்பெர்க்

ஒரே ஆண்டில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை இழந்து , போர்ப்ஸ் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க். சமூக வளைதளமான ஃபேஸ்புக் -மெட்டா வின் நிறுவனர் மார்க்…

ஒரே ஆண்டில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாயை இழந்து , போர்ப்ஸ் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்.

சமூக வளைதளமான ஃபேஸ்புக் -மெட்டா வின் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க். மிக இளம் வயதில் அமெரிக்க நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றார். தற்போது மார்க்குக்கு 38 வயதாகிறது. கொரோனா தொற்றுக் காலத்திற்கு பிறகு பல நிறுவனங்களின் பங்கு மதிப்பும், தனி நபர்களின் சொத்து மதிப்பும் மெல்ல, மெல்ல சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்த சரிவுச் சுழலில் ஃபேஸ்புக்கும், அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்கும் தப்பிக்க முடியவில்லை.

2021ஆம் ஆண்டு செப்டம்பரில் மார்க்கின் சொத்து மதிப்பு சுமார் 80 பில்லியன் டாலராக இருந்தது. நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதம் , 23 பில்லியன் டாலர் மதிப்பு குறைந்து , சொத்து மதிப்பு 57 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளார். இதனால் போர்ப்ஸ் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து, வெளியேறி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ஓராண்டில் ஃ பேஸ்புக் – மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 57 சதவீதம் சரிவடைந்துள்ளது என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் ஃபேஸ்புக் – மெட்டா மட்டுமின்றி அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில மாதங்களாக சரிவடைந்து வருகின்றன. மைக்ரோசாப்ட் 14 சதவீத சரிவும், கூகுளின் ஆல்பாபெட் 25 சதவீத சரிவும், அமேசான் 27 சதவீத சரிவும் அடைந்துள்ளது என போர்ப்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் முதல் 10 பணக்காரர்களாக டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் , 251 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாமிடம் அமேசானின் , ஜெஃப் பெசோஸ்க்கு சொத்து மதிப்பு 151 பில்லியன் டாலர் , மூன்றாமிடத்தில் மைக்ரோ சாப்டின் , பில் கேட்ஸ் சொத்து மதிப்பு 106 பில்லியன் டாலர் , நான்காம் இடம் ஆரக்கிளின் , லாரி எலிசன் , 101 பில்லியன் டாலர் , ஐந்தாமிடம் ,உலக பெரும் முதலீட்டாளர் வாரன் பஃபெட் ,சொத்து மதிப்பு 97 பில்லியன் டாலர்.

ஆறாமிடத்தில் வால்மார்ட் நிறுவனத்தின் வாரிசு ஜிம் வால்டன், ஏழாமிடத்தில் நியூயார்க் நகர முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க் , எட்டாமிடத்தில் மைக்ரோசாப்ட்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர், ஒன்பது மற்றும் பத்தாமிடத்தில் கூகுள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோர் அமெரிக்காவின் டாப் 10 பணக்காரர்களாக உள்ளனர்.

ஃபேஸ்புக்கை தொடங்கிய 4 ஆண்டுகளில் மார்க் ஜுக்கர்பெர்க் 2008 ஆம் ஆண்டில் முதல் முறையாக பில்லியனர் ஆனார். அப்போது ஃபோர்ப்ஸ் 400 பட்டியலில் 321வது இடத்தை 23 வயதில் பெற்றார். 2011 ஆம் ஆண்டு அவரது நிகர சொத்துமதிப்பு $17.5 பில்லியனாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு, உச்சபட்சமாக சுமார் 80 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தை மற்றும் வர்த்தக மதிப்பின் அடிப்படையில் சரிவைச்சந்தித்தாலும் ,, டிஜிட்டல் ஊடகத்தில் ஃபேஸ்புக் – மெட்டா ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு மிக அதிகம் என்றால் மிகையில்லை

  • ரா.தங்கபாண்டியன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.