மாரிமுத்துவின் உடல் இறுதிச்சடங்கிற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டது : ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

இறுதிச்சடங்கிற்காக சொந்த ஊர் புறப்பட்ட மாரிமுத்துவின் உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து, ‘கண்ணும் கண்ணும், ‘புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான…

இறுதிச்சடங்கிற்காக சொந்த ஊர் புறப்பட்ட மாரிமுத்துவின் உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மாரிமுத்து, ‘கண்ணும் கண்ணும், ‘புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம்’ செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார். வில்லன் வர்மாவின் வலதுகரமாக அந்த படத்தில் அவர் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பெரும் புகழை பெற்று தந்தது.
இந்நிலையில் தான் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக இன்று காலை சென்னையில் டப்பிங் பேசி வந்தார் மாரிமுத்து. அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து டப்பிங்கை பாதியில் நிறுத்திவிட்டு, அவரே காரை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

சென்னை, விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த மாரிமுத்துவின் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடரந்து மாலை நடிகர் மாரிமுத்துவின் உடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஆம்பூலன்ஸ் மூலம் புறப்பட்டது அப்போது அவரது வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான பொதுமக்களும் ரசிகர்களும், உடன் பணியாற்றிய சக நடிகர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே மாரிமுத்துவின் மகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : அப்பா மாரிமுத்து காலை 8.30 மணிக்கு இறந்தார். 25 ஆண்டாக சினிமாவில் நடிக்கிறார். காலையில் இருந்து நிறைய பேர் வந்தார்கள். அனைவருக்கும் நன்றி. தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு இறுதி மரியாதைக்கு கொண்டு செல்கிறோம். அப்பாவுக்கு சீரியலில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது மறைவு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சாலை வழியாக தேனிக்கு கொண்டு செல்கிறோம். நாளை காலை 10.30 மணிக்கு அடக்கம் செய்ய இருக்கிறோம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.