ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
.
ஜி-20 குழுவின் 18-வது மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்ற்னர். மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் இன்று இந்தியா வந்தடைந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் அஸ்வினி குமார் வரவேற்றார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராக பதவியேற்ற பிறகு ரிஷி சுனக் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.







