முக்கியச் செய்திகள் இந்தியா

மிஸ் இந்தியா போட்டியின் வெற்றியாளருக்கு, மனுஷி சில்லர் பாராட்டு!

மிஸ் இந்தியா போட்டியில் 2வது இடம் பெற்ற மன்யா சிங்கிற்கு மிஸ் வேர்ல்டு 2017 போட்டியின் வெற்றியாளர் மனுஷி சில்லர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மன்யா சிங், பல இன்னல்களை கடந்து மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டார். மேலும் தனது விடா முயற்சியால் அப்போட்டியில் 2வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். பின்னர் அவருடைய வாழ்க்கைப் பயணம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

23 வயதிலேயே மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற இவர், தற்போது இணையத்தை கலக்கி வருகிறார். இவருடைய வெற்றி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இவரின் வெற்றி குறித்து மிஸ் வேர்ல்டு 2017 போட்டியின் வெற்றியாளர் மனுஷி சில்லர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்; உத்தரவை திரும்பபெற்ற மணிப்பூர் அரசு

எல்.ரேணுகாதேவி

நடிகைக்கு பாலியல் தொல்லை: சின்னத்திரை நடிகர் கைது

Gayathri Venkatesan

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரமங்கைகள்

Saravana Kumar

Leave a Reply