மணிப்பூரில் 2 பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – வீடியோ வெளியான நிலையில் 77 நாட்களுக்குப் பின் முக்கிய குற்றவாளி கைது!

மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அடித்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹீரா தாஸ்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை …

மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அடித்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹீரா தாஸ்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை  கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று  கூட்டுப் பாலியல் கொடுமை செய்ததாக காணொலி ஒன்று நேற்று இணையத்தில் வைரலானது. இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் இந்த காணொலிக்கு கடும் கண்டனம் எழுந்தது.  பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி,  முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த வீடியோ தொடர்பாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவிய காணொலியில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், ஆனால் இந்த வீடியோ நேற்று இணையத்தில் வெளியானதாக தெரிவக்கப்பட்டுள்ளது .  கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் காவல்துறை தெரிவித்திருந்தது.

இதனிடையே இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட  ஹீரா தாஸ் (32) என்பவரை 77 நாட்களுக்குப் பின் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இது தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.