பனிப்பொழிவு குறைவால் பூத்துக் குலுங்கும் மா பூக்கள்- விவசாயிகள் மகிழ்ச்சி!

வேதாரண்யம் பகுதியில் பனிப்பொழிவு குறைந்துள்ளதால் மா மரங்களில், பூக்கள் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, தேத்தாக்குடி, புஷ்பவனம், பெரியகுந்தகை, மற்றும் தலை ஞாயிறு உள்ளிட்ட 20க்கும்…

வேதாரண்யம் பகுதியில் பனிப்பொழிவு குறைந்துள்ளதால் மா மரங்களில், பூக்கள் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, தேத்தாக்குடி, புஷ்பவனம், பெரியகுந்தகை, மற்றும் தலை ஞாயிறு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியிகளில் செந்தூரா, பங்கனபள்ளி, ருமெனியா, ஒட்டு மற்றும் நீளம் என 10 வகையான மாங்கன்றுகள் சுமார் 5000 ஏக்கரில் மா விவசாயிகள் வளர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வேதாரண்யம் பகுதிகளில் கடந்த மாதம் பனிப்பொழிவு காரணமாக மாம்பூக்கள் கருகி வந்துள்ளன. இதனை தொடர்ந்து தற்போது பனிப்பொழிவு குறைந்துள்ள நிலையில் மாமரத்தில் மாம்பூக்கள் பூத்து குலுங்கி காணப்பட்டுள்ளது. மேலும் மா மரங்களில் பிஞ்சுகள் விடவும் ஆரம்பித்துள்ளன.  இதை கண்ட விவசாயிகள் இந்த ஆண்டு மா விளைச்சல் நன்றாக இருக்க கூடும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

—-கோ. சிவசங்கரன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.