திருப்பூர், ஆண்டிபாளையம் வாய்க்காலில் விழுந்து காணாமல் போன நண்பரை கண்டுபிடித்துத் தர கோரி சக மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சார்ந்தவர் சங்கீதா. இவரது மகன்
சஞ்சய்(19), திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் பிகாம் மூன்றாம்
ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி. நண்பர்களுடன்
திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள. வாய்க்காலில் குளிப்பதற்காகச்
சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்த போது திடீரென சஞ்சய் நீரில் அடித்துச்
செல்லப்பட்டதாகவும், மேலும் நண்பர்கள் சஞ்சையை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும்,
ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் சஞ்சையை மீட்க முடியவில்லை
என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறை உதவியுடன் நீரில் அடித்து செல்லப்பட்ட சஞ்சயைத் தேடினர். ஆனால் வாய்க்காலில் அதிக அளவில் நீர் செல்வதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி சஞ்சையின் உடலை தீவிரமாகத் தேடிக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என. சிக்கன அரசு கலை கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்று திரண்டு கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து. மாணவ மாணவிகளுடன் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி. மாணவரை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக மாணவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கு. பாலமுருகன்