ஏர் இந்தியா விமானத்தில் பயணி ரகளை : ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வழக்கு..!!

கனடாவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ,  விமான ஊழியர்கள் மீது  தாக்குதல் நடத்தியதாக பயணி ஒரூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக போலீசார் தெரிவித்துள்ளதாவது : “டொரண்டோ நகரில் இருந்து டெல்லி…

கனடாவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ,  விமான ஊழியர்கள் மீது  தாக்குதல் நடத்தியதாக பயணி ஒரூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக போலீசார் தெரிவித்துள்ளதாவது : “டொரண்டோ நகரில் இருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் வந்துகொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் பணியாளர்களிடம் அநாகரிகமாக நடக்க தொடங்கியுள்ளார். முதலில் தனது ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு பதிலாக வேறு இருக்கையில் அமர்ந்துள்ளார்.

மதிய உணவுக்கு பிறகு கழிவறைக்கு சென்ற அவர் அங்கு புகை பிடித்துள்ளார். மேலும் கழிவறை கதவையும் அவர் சேதப்படுத்தியுள்ளார். எச்சரிக்கை ஒலியை கேட்டு அங்கு சென்று சிப்பந்திகள் அவரை லைட்டருடன் கையும் களவுமாக பிடித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்  விமான ஊழியர்களை தாக்கியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து விமான ஊழியர்களும் அவரை கட்டுப்படுத்த முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி வந்தவுடன் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த பயணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.