தான் ஒரு களப் போராளி என தேர்தலில் வெற்றி பெற்ற மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், நந்திகிராம் தொகுதியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அதிகாரி ஒருவர் மிரட்டப்பட்டதாக, தனக்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
வன்முறையை ஒருபோதும் தான் விரும்புவதில்லை என கூறிய அவர், அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தான் ஒரு கள போராளி என குறிப்பிட்ட மம்தா பானர்ஜி, வரும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Advertisement: