மேற்கு வங்கத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த மமதா பானர்ஜி வலியுறுத்துவது எதற்கு?

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 159 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத்…

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் மீதமுள்ள 159 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என மமதா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில்
135 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள 159 தொகுதிகளுக்கும் நாளை முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளை ஐந்தாவது 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மீதமுள்ள 159 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது எனவும், மக்களைப் பாதுகாக்கும் வகையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.