மாமன்னன் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் – படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து உதயநிதி ட்வீட்!

மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதனை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மாமன்னன் படக்குழு சிறப்பித்துள்ளனது. இதனை உதயநிதி தனது  ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். பரியேறும் பெருமாள் மற்றும்…

மாமன்னன் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதனை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மாமன்னன் படக்குழு சிறப்பித்துள்ளனது. இதனை உதயநிதி தனது  ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்ன்னன் திரைப்படத்தில் நடிகர்கள் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ்,  உதயநிதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சுமார் ரூ35 கோடி செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வசூல் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. மொத்தம் இரண்டு நாட்களில் மாமன்னன் திரைப்படம் ரூ.10 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாமன்னன் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதனை முன்னிட்டு படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடந்தது. மிகவும் எளிமையாக படக்குழுவினர்களான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ், கிருத்திகா உதயநிதி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இந்த திரைப்படத்தின் மையக்கருவானது சமூகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடுகளைச் சுற்றியே நகர்கிறது. வடிவேலு, ஃபஹத் பாசில் இருவருமே தங்கள் நடிப்பிற்காக ரசிகர்களிடம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று வருகிறார்கள். சாதியஅரசியலை எதிர்கொள்ளும் தந்தை மற்றும் மகனின் உறவை இயக்குநர் மாரி செல்வராஜ் கச்சிதமாக கையாண்டு இருக்கிறார். உதயநிதியின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை திரையரங்குகளில் பார்க்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.