சென்னையில் பராம்பரிய உடை அணிந்து #Onam கொண்டாட்டம்! நடிகர் ரஜித் மேனன் பங்கேற்பு!

வடசென்னையில் வாழும் கேரள மக்கள் ஒன்றிணைந்து தங்களது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடினர்.  வடசென்னையில் வாழும் மலையாளிகள் அசோசியேஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள்மலையாளிகள் என அனைவரும் ஒன்றிணைந்து தங்களது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையைகொண்டாடினர். இந்த…

Malayalis celebrated Onam wearing traditional clothes in Chennai!

வடசென்னையில் வாழும் கேரள மக்கள் ஒன்றிணைந்து தங்களது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடினர். 

வடசென்னையில் வாழும் மலையாளிகள் அசோசியேஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள்
மலையாளிகள் என அனைவரும் ஒன்றிணைந்து தங்களது குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை
கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் எம்வி மருத்துவமனை மருத்துவர், மலையாளத் திரைப்பட நடிகரும், இயக்குநருமான ரஜித் மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது அனைத்து பெண்களும், தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலம் இட்டு, கொட்டிகளி திருவாதரா நடனம் ஆடுவது வழக்கம். அந்தவகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வடசென்னையில் வாழும் மலையாளிகள் திருவொற்றியூரில் உள்ள தனியார் மண்டபத்தில், தங்கள் குடும்பத்தாருடன் பாரம்பரிய உடை அணிந்து, மகாபலி அசுர சக்கரவர்த்தி வேடம் அணிந்தவர் முன்னிலையில், மல்லிபூ, சம்பங்கிபூ சாமந்திப்பூ உள்ளிட்ட பலவகையான பூக்களால் அழகான அத்தப்பூ கோலம் இட்டு, அந்த கோலத்தை சுற்றி பாரம்பரிய நடனமான கொட்டிகளி திருவாதரா நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தீமைகள் விலகி நாடு வளம் பெறவும், அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவம், சாதி, மதம்
மொழி போன்ற வேறுபாடுகளை கலைந்து மகிழ்ச்சியாக வாழ இந்த பண்டிகை கொண்டாடப்படுவதாக பெண்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கேரளாவில் விற்பனையாகும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், கேரளா பாரம்பரிய உடைகள், அலங்கார பொருட்கள், அப்பளம், சிப்ஸ், தேங்காய் எண்ணெய், இயற்கை சோப்பு, மூலிகை பொருட்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.