‘Stranger Things Season – 5’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் -5ன் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களை போன்று ஹாலிவுட் வெட் சீரிஸ்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வாறு ரசிகர்களை கவர்ந்து இழுத்த சீரிஸ்களில் ஒன்றுதான் ‘ஸ்ட்ரேஞ்சர்…

Major update on Stranger Things Season 5!

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் -5ன் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் திரைப்படங்களை போன்று ஹாலிவுட் வெட் சீரிஸ்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவ்வாறு ரசிகர்களை கவர்ந்து இழுத்த சீரிஸ்களில் ஒன்றுதான் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் வினோனா ரைடர், டேவிட் ஹார்பர், பின் வொல்ஹார்ட், மில்லி பாபி பிரவுன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதுவரை 4 சீசன்கள் வெளியாகி உள்ளன. தற்போது இதன் 5வது சீசன் உருவாகி வருகிறது. இது இந்த தொடரின் கடைசி சீசன் ஆகும். இந்த சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் இந்த சீசனின் 8 எபிசோடுகளின் தலைப்புகள் வெளியானது.

இந்த நிலையில், தற்போது இத்தொடரின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் -5ன் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசன் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.