மகாராஷ்டிராவில் ஜனவரி 26ம் தேதி முதல் சிறைச்சாலை சுற்றுலாவை அம்மாநில அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சுற்றுலா தலங்களாக மாற்றப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களுக்கு வரலாறு, பண்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் புதிய முயற்சியாக சிறைச்சாலை சுற்றுலா தலமாக மாற்றப்படவுள்ளது. இதனை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதி செய்துள்ளார். புனேவில் உள்ள எரவாடா சிறையில் இந்த திட்டம் தொடங்கவிருக்கிறது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் இதனை தொடங்கி வைக்கவிருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலத்தில், சுதந்திர வீரர்கள் பலர் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அதனால் இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு எரவாடா சிறைச்சாலையை தேர்வு செய்துள்ளனர். இங்கு பொதுமக்கள், மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவிருக்கிறது. கடந்த காலத்தில், சிறைச்சாலையில் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் என்னென்ன நடைபெற்றது என்பதை மக்களுக்கு புரிய வைக்கவே இந்த திட்டம் தொடங்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் வேறு சில சிறைச்சாலைகளும் சுற்றுலா தலமாக மாற்றப்படவிருக்கின்றன. இது பொதுமக்களுக்கும் புதுவித அனுபவமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.