நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்துப் பெற்ற ‘மகாராஜா’ படக்குழு!

‘மகாராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.  குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படத்தை…

‘மகாராஜா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய திரைப்படம் மகாராஜா. இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, கதாநாயகனாக விஜய் சேதுபதிக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது.

ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார். இதன் எதிரொலியால், படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியது. திரை வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது.

இந்நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழு இன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், விஜய்யுடன் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.