மஹாளய அமாவாசை – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு..!

பாபநாசம் பாவநாத சுவாமி கோவிலில் தாமிரபரணி நதிக்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு…

பாபநாசம் பாவநாத சுவாமி கோவிலில் தாமிரபரணி நதிக்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பாபநாசம் பாபநாசநாதர் சுவாமி கோவில் முன்பு உள்ள படித்துறையில் அதிகாலை முதலே பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு குவிந்தனர்.

புரட்டாசி மாதங்களில் வரும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில்
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினார்கள். மகாலய அமாவாசை தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலை பகுதிகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள்.

இதன் மூலம் முன்னோர்களிடம் இருந்து ஆசீர்வாதங்களை பெறலாம் என்பது ஐதீகம்
தாமிரபரணி ஆற்று படித்துறை, கல்லிடைகுறிச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில்
ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்தனர். தொடர்ந்து தாமிரபரணி
ஆற்றில் புனித நீராடினர். தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் அங்கு போலீசார் வாகன போக்குவரத்தை சீர் செய்தனர்

பாபநாசம், பாபநாசநாதர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மிக நீண்ட
வரிசையில் என்ற பக்தர்கள். பக்தர்களின் நெரிசலை கண்காணிப்பதற்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  நதியை மாசு படுத்தாமல் இருப்பதற்காகவும் பக்தர்கள் பயன்படுத்தும் உடைகளை நீரில் விட்டு விடாமல் இருப்பதற்காகவும் தன்னார்வலர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.