மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட…

மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர், சமயபுரம் கோயிலுக்கு சென்றுவிட்டு, காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே கார் வந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த படாளம் போலீசார், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply