மதுரை | வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி மக்களின் கனவு திட்டமான 59 கிராம பாசன கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி அப்பகுதி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு…

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி மக்களின் கனவு திட்டமான 59 கிராம பாசன கால்வாயில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி அப்பகுதி வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம பாசன கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தர அரசாணை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விவசாயிகளுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தக மற்றும் வணிகர்கள் சங்கங்கள் இணைந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகளை அடைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போன்று வழக்கறிஞர் சங்கமும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளனர்.,வாடகை ஆட்டோ மற்றும் கார் போன்றவையும் இன்று இயக்கப்படவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.