மதுரை சித்திரை திருவிழா: டிக்கெட் முன்பதிவுகள் தொடக்கம்

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்…

மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா நாளை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதனையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க ரூ.500 கட்டணச் சீட்டு 2500 பேருக்கும், ரூ.200 கட்டணச் சீட்டு 3200பேருக்கும் வழங்கப்படவுள்ளது.chithirai thiruvizha 2022

அதனை இணையதளத்தின் வாயிலாக பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, WWW.MADURAIMEENAKSHI.ORG என்ற இணையதளத்திலும், மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி அலுவலகத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 7-ம் தேதி வரை முன்பதிவு நடைபெறும் நிலையில், தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 13-ம் தேதி கட்டண அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளதாவது,

* முன்பதிவு செய்பவர்கள் ஆதார்கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, லைசென்ஸ், ரேசன்கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவண நகல் மட்டும் செல்போன் எண், மெயில் ஐடிகளை சமர்பிக்க வேண்டும்.
* அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவிற்கு முன்பதிவு செய்தால் கணினி முறை குலுக்கல் நடத்தி பின்னர் அனுமதி சீட்டு வழங்கப்படும்


* 500ரூபாய் கட்டண தரிசனத்திற்கு ஒரு நபர் இரு அனுமதி சீட்டும், 200ரூபாய் கட்டணத்திற்கு ஒரு நபருக்கு 3அனுமதி சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும்

* 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு 13ஆம் தேதி கட்டண அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.