முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும், மாநில அரசிற்கும் சம்பந்தம் இல்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்

பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கும் மாநில அரசிற்கும் சம்பந்தம் இல்லை; அதே நேரத்தில் மத்திய அரசை சொல்வதற்கு அதிமுக விற்கு தைரியம் இல்லை, சொல்லவும் மாட்டார்கள் என தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளளார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் தெரிவித்துள்ளதாவது, பல்கலைகழகங்களுக்கு நுழைவு தேர்வுகளை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ள ஓபிஎஸ் -ற்கு தெரியாதா இது மத்திய அரசு கொண்டுவரும் திட்டம் என்று என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் அனுப்பப்படுவதில்லை. மாவட்டத்தில் 7 குவாரிகள் செயல்பட்டு வந்தாலும் இங்கிருந்து எடுக்கப்படும் கற்கள் அனைத்தும் குமரி மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

 மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியை தர வாய்ப்புள்ளதால், அவர்களின் வழிகாட்டுதலின் படியே வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. வரி உயர்வது, விலைவாசி உயர்வது தவிர்க்க முடியாத ஒன்று. பொதுமக்களுக்கு பாதிக்காதவாறு, வண்டு பூவிலிருந்து தேன் எடுப்பது போல் எளிதாக வரி வசூல் செய்யப்பட உள்ளது என்றார்.

மேலும், தமிழக ஆளுநர் அரசிற்கு எதிராக, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் தராமல் இருக்கிறார் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பெண்களை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்ற அரசு துணை நிற்கும்; மு.க.ஸ்டாலின்

Arivazhagan CM

பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கான் தலைமையிலான அரசு

Arivazhagan CM

லட்சத்தீவில் உள்ள இஸ்லாமியர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முகமது அபுபக்கர்

Vandhana