முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மதுரை எய்ம்ஸ் காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி 95% நிறைவு- மத்திய அரசு தகவல்

“மதுரை எய்ம்ஸ்” மருத்துவனைக்கான காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி 95% நிறைவு பெற்றுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் உறுப்பினர் வைகோ மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதற்கான காரணங்கள் என்ன? நிலம் ஒப்படைக்கப் பட்ட பிறகும் தாமதம் அடைவதற்கான காரணங்கள் குறித்தும் முழுமையான வளாகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2020ம் ஆண்டு நிலங்கள் ஒப்படைக்கப் பட்டது. அதன்படி 95% தொடக்கப்பணிகள் குறிப்பாக காம்பவுண்ட் சுவர் உள்ளிட்டவை கட்டும் பணிகள் முடிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கான கூடுதல் திட்ட பணிகள் சேர்க்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால் வளாகம் கட்டமைக்க மாஸ்டர் பிளான், திட்டமிடல் பணிகள், உபகரணங்கள் தேவை உள்ளிட்டவை குறித்து முழுமையான அறிக்கையை தயார் செய்யப்பட்டதற்கு பின்னர் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கடன் வழங்க ஒப்புதல் வழங்கி அதன்படி 2021 மார்ச் 26ம் தேதி இந்தியா ஜப்பான் இடையே கையெழுத்து ஒப்பந்தம் நடைபெற்றது.

திட்ட மதிப்பு முதலில் 1,264 கோடி என மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் மாற்றியமைக்க பட்ட மதிப்பீடாக 1,977.8 கோடி ரூபாய் எனவும், கடன் ஒப்பந்தத்தின் படி 5 வருடம் 8 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டக்கூடிய பணிகள் முடிவடைய வேண்டும். அதன்படி 2026 அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் 50 மாணவர்கள் பயில்வதற்கான கல்வி தொடங்கப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாடு இருண்ட மாநிலமாக மாறிவருகிறது- டிடிவி தினகரன்

G SaravanaKumar

11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள மெட்டா; மேலும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்?

Yuthi

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

Web Editor